அப்பா, அம்மா கொண்டாந்து விட்டப்ப
ஒருத்தவங்க இன்னொருத்தவங்கல வாங்க,போங்கனு கூப்பிட்டு
அடுத்த வாரத்திலேயே மச்சான்/மச்சினு வந்து நின்ன வார்த்தைங்க
நிச்சயமா அழகுதாங்க...

சில Staff பாடம் நடத்த
Sincere-அ கவனிக்கிறதா
எத்தன பேரூ நடிச்சோம்
எத்தன Arrears வச்சோம்...

பொண்ணுங்க கூட பேசுறப்ப
"டேய் மொக்க, கடல போட்டது போதும்"-னு
நண்பன் Cool-அ சொல்லிட்டு போனாலும்
"போடா, நாதாரினு" அவனவன் அவன் வேலைய பாப்போம்...

Exam-ல ஒன்னுமே தெரியாம
25 பக்கம் எழுது எழுதுனு எழுதிட்டு (ஆத்து ஆத்துனு ஆத்திட்டு)
"ச்ச.. ஒரு question விட்டுடேன்"-னு
வெட்டி வீராப்பு விட்டத நினைச்சா
இன்னைக்கும் சிரிப்பு வருது...

புது படம் ரிலிஸ்னாலும், என்ன படம் வந்தாலும்
நம்மல பாக்காம போகாது
எத்துன படம் பார்த்தோம்னு என்னவும் முடியாது...

போடா பொறம்போக்கு-னு ஆரம்பிச்சு
எதுல வேணும்னாலும் கொண்டாந்து முடிச்சு
அடிச்சு,புடிச்சு இரத்தம் வந்தாலும்
"என்னடா மச்சான் என்ன ஆச்சு"-னு கேட்டா போதும்
அம்புட்டு கலேபரமும் கலைஞ்சு போயிடும்

pen வாங்கினாலும் treatu
பொண்ணுங்கிட்ட திட்டு வாங்கினாலும் treatu
கடைல புது Account open பன்னினாலும் treatu
ச்சும்மா, பொழுது போகலனாலும் treatu...

Industrial Visit-னு சொல்லிட்டு
ஊரு ஊரா சுத்திட்டு
உலகம் மறந்து சுத்தின தினங்கள்
அம்புட்டும் பசுமையா மனசுல...

Birthday-ய ரூம்ல மட்டும் கொண்டாடம
Class ரூம்லயும் கொண்டாடிட்டு
Staffs-ட திட்டு வங்கிட்டு
ரவுண்டு கட்டி சிரிச்சிருக்கோம்...

எத்தன காதல் பாத்தோம்
எத்தன மோதல் பாத்தோம்
அத்தனையும் அள்ளி வச்சு
கட்டி முடிச்சா "Degree Certificate" கிடைச்சிடிச்சு...

இன்னைக்கும் மொக்க போட
இன்னைக்கும் கடல போட
புதுசு புதுசா யார் வந்தாலும்
காலேஜ் life கலக்கல் life-தாங்க...

நீங்க என்ன சொல்றீங்க...

- இப்படிக்கு "பாஸ்கி"

Newer Posts Home